இந்தியா

அதிகாலையில் மிரட்டல்: அகமதாபாத் சென்றது மும்பை விமானம்

அதிகாலையில் மிரட்டல்: அகமதாபாத் சென்றது மும்பை விமானம்

webteam

மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அந்த விமானம் அகமதாபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

டெல்லியில் இருந்து மும்பைக்கு 9W339 என்ற எண் கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. போனில் வந்த அச்சுறுத்தலை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானம், அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. மும்பையில் அதிகாலை 2.55 மணிக்கு இறங்க வேண்டிய விமானம்,  அகமதாபாத்தில் அதிகாலை 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். விமானத்திற்கு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் விமானம் தரையிறக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் விவரம் வெளியிடப்படவில்லை.