இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி நாராயணன் பதவி ஏற்க இருப்பதாக அறிவிப்பு.
கேள்வி நேரத்துடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை அண்ணா பல்கலை. விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டம்.
பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் முடிவு, மாநில உரிமைகள் மீதான தாக்குதல் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கண்டனம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளிடமே கல்வித் துறை இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு. ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிப்பு.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து தேர்தல் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்.
அரசு விடுமுறை நாட்கள் வருவதால், 10,13 மற்றும் 17 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே மனுதாக்கல் செய்ய முடியும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை புதிய தலைமுறைக்கு தகவல்.
காங்கிரஸ் மேலிடம், தமிழக முதலமைச்சரிடம் ஆலோசித்த பின் வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பேட்டி.
வரும் 11ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கப்பட வாய்ப்பு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அண்ணாமலை பதில். இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி மதுரை மேலூரில் தமுக்கம் திடலில் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் பேரணி.
காவல் துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் பாஜக அரசை பற்றி ஒரு வரி கூட இபிஎஸ் பதிவிடவில்லை என அமைச்சர் ரகுபதி விமர்சனம். அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்டச்செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கைது. இருவருக்கும் வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனை. 17 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில், சில ஆவணங்களின் நகல்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்.
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கு ஆன்லைனில் பதிவு. 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.
இந்தியாவில் HMP வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு. கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
HMP வைரஸ் கொரோனாவை போல் வீரியமிக்கதில்லை.. ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குப்பை மேடுகளாக காட்சியளிக்கும் கான்கிரீட் வீடுகள். உயிரிழந்தோர் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்.
சவூதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் வீதிகளில் பாய்ந்தோடும் வெள்ளம். வாகனங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
துபாயில், பயிற்சியின்போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி. அஜித்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல்.