Headlines facebook
இந்தியா

Headlines|தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் வைரஸ் குறித்து மறுக்கும் சீனா வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி முதல் வைரஸ் தொற்று குறித்து மறுப்பு தெரிவித்த சீனா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று தொடக்கம். 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

  • பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க ஏதுவாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

  • புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 750 ரூபாய் ரொக்கப் பரிசு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

  • விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு. பள்ளியின் தாளாளர் உட்பட மூன்று பேர் கைது.

  • விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

  • சொரிமுத்து ஐயனார் கோயிலில் பக்தர்கள் தங்க தடை விதிக்கலாமே என தாமிரபரணியை தூய்மைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.

  • திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் 11 மணி நேரம் நீடித்த அமலாக்கத் துறை சோதனை நிறைவு. பூட்டியிருந்த 2 அறைகளின் கதவை உடைத்து சோதனை நடத்தியதாக தகவல்.

  • மதுரையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைதாகி விடுதலை. கைதானவர்கள் ஆடுகள் அடைக்கப்படும் வளாகத்தில் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

  • ஜனவரி இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவு. பிப்ரவரியில் படப்பிடிப்பு முடிந்ததும் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டம்.

  • வைரஸ் தொற்று வேகமாக பரவும் தகவலுக்கு சீனா மறுப்பு. இந்நிலையில், தற்போதைக்கு இந்தியா அச்சம் அடைய தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம்.

  • சிறுவர்கள் சமூக வலைதளக் கணக்கு தொடங்க பெற்றோரின் அனுமதி கட்டாயம் என டிஜிட்டல் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரைவு விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

  • மணிப்பூரில் குக்கி மக்களின் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில்,தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிக்கு தலையில் காயம்.

  • டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை அடுத்த வாரம் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம். இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல்.

  • லடாக்கின் சில இடங்களை சேர்த்து 2 புதிய நிர்வாக பகுதிகளை அறிவித்த சீனா. சட்டவிரோதம் என கூறி இந்தியா கடும் கண்டனம்.

  • சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் சுமார் 32 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம். கடந்தாண்டை விட கூடுதலாக 4 லட்சம் பக்தர்கள் வருகை.உண்டியல் வருவாயும் 297 கோடியை கடந்தது.

  • இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை நடத்தப் போவதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல். 2 குழுக்களை தயார்படுத்தி இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவிப்பு.

  • காஷ்மீரின் லேவில் நடந்த மகளிர் ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், அடுத்தடுத்து கோல்கள் அடித்து இந்திய ராணுவ அணி வெற்றி.

  • பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி. தரவரிசையில் 293 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ஒப்பல்காவிடம் வீழ்ந்தார்.