Headlines Facebook
இந்தியா

Headlines|பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் முதல் போருக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் முதல் போருக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம். ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு.

  • தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு. ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கும் பொங்கல் பரிசை அறிவித்தது தமிழக அரசு.

  • செஸ் உலக சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • தமிழகத்தை சேர்ந்த மணிஷா ராமதாஸ், துளசிமணி முருகேசன், நித்யஸ்ரீ உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு. மூவருக்கு துரோணாச்சாரியார் விருதை அறிவித்தது மத்திய அரசு.

  • விளையாட்டு துறையில் சாதனை படைப்போரின் எண்ணிக்கை உயர வேண்டும் என கேல் ரத்னா, அர்ஜூனா விருது வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

  • பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இபிஎஸ் கண்டனம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்.

  • தமிழக அரசை குறை கூற ஒரே பொய்யை அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்.

  • மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் குறித்து அதிர்ச்சித்தகவல்கள். பள்ளிக்கரணையில் வீடு புகுந்து கொள்ளையடித்து பண்ணை வீடு வாங்கியதாக தகவல்.

  • அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் இன்று நீதி பேரணி. மதுரையில் தொடங்கி சென்னை வரை பேரணி மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு.

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பெண் கொலை.இந்நிலையில், டீ மாஸ்டரை கைது செய்து காவல் துறை சிறையில் அடைத்துள்ளனர்.

  • பட்டுக்கோட்டை அருகே இரு பேருந்துகளின் இடையே சிக்கிய இளைஞர். தனியார் பேருந்தை அரசுப்பேருந்து முந்திச்செல்லும்போது ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.

  • பாஜக மாநில தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு. தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்.

  • அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம். துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வலிமையும், ஆறுதலும் கிடைக்கட்டும் என்றும் சமூக வலைதளத்தில் பதிவு.

  • ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரம் பெங்களூரு. ஆண்டுக்கு சராசரியாக 132 மணிநேரம் நெரிசலில் சிக்கித்தவிக்கும் நகரவாசிகள்.

  • சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர். பி.பி.எஸ்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து திணறல்.

  • சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை. இந்திய அணியை வழிநடத்துகிறார் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா

  • பிரிட்டனில் ஜுராசிக் காலத்தை சேர்ந்த டைனோசர்களின் கால்தடங்கள் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு.

  • காசாவில் போருக்கு மத்தியில் அச்சுறுத்தும் ஊட்டச்சத்து குறைபாடு. 3,500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.