Headlines facebook
இந்தியா

Headlines|மூடப்பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் முதல் வெளியான விடாமுயற்சி ட்ரெய்லர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மூடப்பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் முதல் வெளியான விடாமுயற்சி ட்ரெய்லர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்கின்றனர்.

  • களத்தில் நின்று ஆட்டம் காட்டிய காளைகளால் புழுதிப் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. விறுவிறுப்பாக நடந்த போட்டிகளில் 20 காளைகளை தழுவிய அபிசித்தர் முதல் பரிசாக காரைத் தட்டிச்சென்றார். சிறந்த காளையாக தேர்வான பாகுபலி காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு. சிறந்த காளை மற்றும் வீரர்கள் என இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கும் பரிசுகள்.

  • தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 7 பேர் உயிரிழப்பு. போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பார்வையிடச் சென்றவர்கள் உயிரிழந்த சோகம்.

  • காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள் கொண்டாட்டம். சென்னையில் கடற்கரைகளில் குடும்பமாக கூடி பொழுதை கழித்து உற்சாகம்.

  • காணும் பொங்கலையொட்டி சாப்பாட்டு போட்டி நடத்தி பரிசுகளை வழங்கி உற்சாகம். கணவன், மனைவியை தூக்கிக்கொண்டு ஓடிய ஓட்டப்போட்டிகளால் சுவாரஸ்யம்.

  • பொள்ளாச்சியில் இருந்து பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன் மீண்டும் பாலக்காடு வயல்வெளியில் தரையிறங்கியது. பலூனில் பயணித்த 3 பேர் பத்திரமாக மீட்பு.

  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆட்சியரை, மேடையிலிருந்து அகற்றியதாக அண்ணாமலை கண்டனம். திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாகவும் குற்றச்சாட்டு.

  • ஜல்லிக்கட்டு விழா மேடையில் தன்னை யாரும் எழுந்து நிற்க கூறவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம். புகைப்படங்களை பார்த்துவிட்டு கதை கூறுபவர்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றும் பேட்டி.

  • ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு. பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு அதிகாரம் தொடர்பான விவகாரத்தையும் விசாரிக்கக்கோரி கூடுதல் மனுத்தாக்கல்.

  • மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 ஆவது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

  • ஸ்ரீஹரிகோட்டாவில் 3ஆவது ஏவுதளம் அமைப்பதற்கும் அனுமதி. ககன்யான் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக நிகழ்த்தி புதிய வரலாறு படைத்தது இஸ்ரோ.

  • 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக அறிவிப்பு.

  • அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு. அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் ஏதும் இல்லை என நிறுவனர் ஆண்டர்சன் விளக்கம்.

  • கத்திக் குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நடிகர் சயீஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை. தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை விளக்கம்.

  • 12 ஆண்டுகளுக்கு பிறகு விண் நடை மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ். தொலைநோக்கியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

  • போர் நிறுத்த ஒப்பந்த கட்டுப்பாடுகள் குறித்து இஸ்ரேல் அமைச்சரவை தீவிர ஆலோசனை. பிணை கைதிகளை விரைவில் மீட்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு வலியுறுத்தல்.

  • காசாவில் ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கூடாது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக உள்நாட்டு இளைஞர்கள் போராட்டம்.

  • இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ. அனுமதியின்றி மனைவி மற்றும் குடும்பத்தினரை போட்டி நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல தடை..

  • நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியானது. பிப்ரவரி 6 ஆம்தேதி வெளியாகிறது திரைப்படம்.