தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்படுகிறது. சுற்றுலாத் தளங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கலையொட்டி சென்னையில் 17 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு. கடற்கரைகளில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு.
அவனியாபுரம், பாலமேட்டைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் இன்று நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு. திமிறும் காளைகளை தழுவ தயாராகும் காளையர்கள்.
டோக்கன் வழங்குவதில் முறைகேடு எனக்கூறி அலங்காநல்லூரில் வாடிவாசல் முன்பு காளை உரிமையாளர்கள் போராட்டம். அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 5 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உயிரிழந்த வீரர் நவீனின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
பாலமேடு ஜல்லிக்கட்டில்14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பார்த்தீபனுக்கு கார் பரிசு. இரண்டாம் இடம் பிடித்த துளசி, 3ஆம் இடம் பிடித்த பிரபாகரனுக்கு இருசக்கர வாகனம் பரிசு.
சிறந்த காளைக்கான பரிசு வென்ற சத்திரப்பட்டி விஜய தங்க பாண்டியனுக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு 2 ஆவது மூன்றாவது இடம் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் காளையான, கொம்பன் காளைக்கு பரிசு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்.
பிரபல ரவுடி பாம் சரவணன் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு.காலில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் 3 புதிய போர்க் கப்பல்களை மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
திருவள்ளுவர் தினத்தையொட்டி மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை. 10 பேருக்கு திருவள்ளுவர், அண்ணா, அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கி கௌரவம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு தொடர்புடைய 100 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை.
போதிய எரிபொருள் இல்லாததால் திசைமாறி விளைநிலத்துக்குள் இறங்கிய ராட்சத பலூன். பலூனில் பயணம் செய்த 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
தஞ்சையில் பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டினர். நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்றவாறு நடனமாடி உற்சாகம்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 500 காளை உரிமையாளர்கள் விண்ணப்பம். 3 ஆயிரத்து 500 காளைகள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் ஏற்பட்டாளர்கள் திணறல்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் வரும் 19 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிப்பு.
பணய கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம். 15 மாதங்களுக்குப் பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்க இருப்பதால் காஸா மக்கள் மகிழ்ச்சி.