தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் 2025ஆம் ஆண்டை உற்சாகமாக மக்கள் வரவேற்றனர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம். நள்ளிரவில் வீதிகளில் திரண்டு மக்கள் குதூகலம்.
உலக நாடுகளில் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்ற மக்கள். விண்ணை பகலாக்கிய வாண வேடிக்கைகளை வெடித்து வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு. இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலை கடலென திரண்ட பக்தர்கள்.
புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்... எங்கும் நலமே சூழட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.
மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் என வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.
மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமையை காப்போம் என தவெக தலைவர் விஜய் வாழ்த்து. மேலும், உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகம் அமைப்போம் என்றும் உறுதி.
அஜித் குமாரின் விடா முயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என படக்குழு அறிவிப்பு. மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.
தங்களது போராட்டம் நாடகம் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடத்திய போராட்டங்கள் அனைத்தும் நாடகமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கொடூர மன நிலையுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்.
சென்னை கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் தீண்டாமை கொடுமை நடப்பதாக புகார். பட்டியல் சமூக மாணவர்களை சாதி ரீதியாக திட்டியதாக 3 ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு.
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் பிரேன் சிங்.இந்நிலையில், பிரதமர் மோடி மணிப்பூரை புறக்கணித்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி.
கேரளாவை மினி பாகிஸ்தான் என விமர்சித்த மஹாராஷ்டிர அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு பினராயி விஜயன் கண்டனம். மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் கோட்டையாக கேரளா விளங்குவதாக பதில்.
சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டம்.
ஆண்டின் இறுதி நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவுடன் நிறைவடைந்தது வர்த்தகம். இறக்கங்கள் இருந்தாலும் ஓராண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 8 விழுக்காடு அளவுக்கு மேல் வளர்ச்சியடைந்துள்ளன.