இந்தியா

நிலச்சரிவால் மறைந்த தேசிய நெடுஞ்சாலை : பயணிகள் அவதி

நிலச்சரிவால் மறைந்த தேசிய நெடுஞ்சாலை : பயணிகள் அவதி

webteam

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வழக்கம் போல போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் உள்ள திக்டோல் என்ற இடத்தில் நில அதிர்வின் காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலையோரம் ஒட்டிச்சென்ற நெடுஞ்சாலையில், மலையின் மண் சரிந்து விழுந்தது. அதிக அளவு மண்சரிவு ஏற்பட்டு ரோடு முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இந்த மண்சரிவால் அந்தச் சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சரிந்து விழுந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை 300 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இது காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிக்கு இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும், காஷ்மீருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் இந்தச் சாலை தான் பயன்படுத்தப்படுகிறது.