இந்தியா

ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் வழிபாடு

Veeramani

இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

முன்னதாக ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஜம்முவில் இரவு தங்கும் ராகுல், பின்னர் காந்திநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பிறகு, உள்ளூர் தலைவர்களுடன் கலந்துரையாடும் ராகுல், மாலையில் டெல்லி திரும்பவிருக்கிறார்.