இந்தியா

பனிப்பொழிவால் முறிந்து விழும் ஆப்பிள் மரங்கள்

பனிப்பொழிவால் முறிந்து விழும் ஆப்பிள் மரங்கள்

jagadeesh

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் ஆப்பிள் மரங்கள் முறிந்து விழுந்தன. புல்வாமா மற்றும் சோஃபியான் மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அள‌வு பனிப்பொழிவு நிலவுகிறது. 

இதனால் அங்குள்ள ஆப்பிள் மரங்களில் பனி படர்ந்திருப்பதால் அதனைத் தாங்க முடியாமல் கிளைகள் முறிந்து விழுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முறிந்த மரங்கள் குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோல கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மணாலி-லே சாலையில், இரண்டு மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.