இந்தியா

டெல்லி: ஐசியூ படுக்கை வேண்டி ட்வீட் செய்த ஜாமியா பேராசிரியை கொரோனா பாதிப்பால் மரணம்

டெல்லி: ஐசியூ படுக்கை வேண்டி ட்வீட் செய்த ஜாமியா பேராசிரியை கொரோனா பாதிப்பால் மரணம்

Veeramani

ட்விட்டரில் தனக்கு ஒரு .சி.யூ படுக்கை வேண்டும் என கோரிக்கை வைத்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் 38 வயதான டாக்டர் நபிலா சாதிக் திங்கள்கிழமை இரவு ஃபரிதாபாத் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஜே.என்.யுவின் பி.எச்.டி அறிஞராக பணியாற்றிய டாக்டர் நபிலா சாதிக் ஏப்ரல் 20 வரை மாணவர்களுக்கு அவர்களின் ஆய்வறிக்கையை தயாரிக்க உதவிசெய்து வந்தார். நபிலாவின் மரணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னர், அவரது தாயார் நுஜாத் (76) கோவிட் தொடர்பான சிக்கல்களால் இறந்துவிட்டார். அவரது தந்தை கொரோனா பாதிப்பால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்.

மே 2ஆம் தேதியன்று நபிலா வெளியிட்ட கடைசி ட்வீட்டில், "இந்த விகிதத்தில் கொரோனா பரவினால் யாரும் டெல்லியில் குறைந்தபட்சம் உயிருடன் இருக்க மாட்டார்கள்." எனத் தெரிவித்திருந்தார்.

ஜாமியாவைச் சேர்ந்த எம்.. மாணவரான லாரைப் நயாசி மற்றும் சகமாணவர்கள் பேசும்போது , “அவரது உடல்நிலை குறித்து நாங்கள் அறிந்ததும், மற்ற மாணவர்களுடன் நாங்கள் அவருக்காக படுக்கைகளை தேட ஆரம்பித்தோம். இறுதியாக அவர் அல்ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், நாங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட அவரது தாயை சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் அவர் காலமானார். மே 7 அன்று அவரது தாயின் இறுதி சடங்குகளைச் செய்ய மாணவர்கள் உதவினார்கள். அதே நேரத்தில், நபிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அவரது ஆக்ஸிஜன் அளவு 32% ஆக குறைந்தது. சி.டி ஸ்கேன் செய்தபின், அவரது நுரையீரல் மிகவும் சேதமடைந்ததாக மருத்துவர்கள் கூறினார். சனிக்கிழமை இரவு வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டவர் திங்கட்கிழமை இரவு காலமானார்” எனத் தெரிவித்தனர்