கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக ரோபோக்களை ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த க்ளப் பஃர்ஸ்ட் என்ற தனியார் நிறுவனம் புதிய வகை ரோபோக்களை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் நிறுவனர் புவனேஷ் மிஷ்ரா, இந்த ரோபோக்கள் மனிதர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும், மனிதர்கள் முக்ககவசம் அணிந்துள்ளனரா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொற்று பரவி வரும் நிலையில் இது போன்ற ரோபோக்களால் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வேலைப்பளு குறையும் என கூறப்படுகிறது.