மொபைல் ஃபோன்களில் உள்ள ஐஎம்இஐ எண்களை சிதைப்பது தண்டனைக்குரிய குற்றம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இத்தவறை செய்பவர்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருடப்படும் ஃபோன்களின் ஐஎம்இஐ எண்களை சிதைப்பது மூலம் அவற்றை கண்டுபிடிப்பது கடினமாகிறது. மேலும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் மொபைல் ஃபோன்களின் ஐஎம்இஐ எண்களும் சிதைக்கப்படுவதால் விசாரணையில் சிக்கல் ஏற்படுகிறது.