இந்தியா

மழையில் மரத்தடியில் பாடம் படிக்கும் குழந்தைகள்

webteam

முறையான கட்டிட வசதி இல்லாததால் குழந்தைகள் மரத்தடியில் கல்வி பயில வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.  

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது பல்ராம்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் ஜகிமா கிராமம் உள்ளது. அந்தப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்கு சரியான கட்டிடம் இல்லை. அரசு இந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு முறையான கட்டிடம் கட்டித்தர முன் வந்தது. ஆனால் பள்ளிக்கான கட்டிடத்தை எங்கே கட்டுவது என்பது தொடர்பான பள்ளி நிர்வாகத்திற்கும் கிராமவாசிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. ஆகவே கட்டிடம் கட்டிக் கொடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அங்கன்வாடியில் படிக்கும் பிள்ளைகள் மரத்தடியில் உட்கார்ந்து கல்விக் கற்று வருகிறார்கள். மழை, வெயில் என எந்தச் சூழலிலும் இந்த மரத்தடிதான் இந்தப் பிள்ளைகளுக்கு கல்விக்கூடமாக இருந்து வருகிறது. 

நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இருக்க கூடாது. முறையாக கல்விக்கற்று முன்னேற வேண்டும் என அரசே விழிப்புணர்வு விளம்பரத்தை வெளியிட்டு வரும் இந்தக் காலத்தில் முறையான கட்டிடம் இல்லாமல் தவிக்கும் இவர்களை பற்றிய செய்தியை ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.