இந்தியா

தொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை: பக்தர்கள் உற்சாக நடனம்

webteam

உலக புகழ்பெற்ற ஒடிஷாவின் புரி ஜெகன்னாநர் கோயில் ரத யாத்திரை இன்று கோலா‌லமாகத் தொடங்கி‌யது. 

ஒடிஷா மாநிலம், புரியில் அமைந்துள்ள ஜெகன்னாதர் கோயில், வைணவத் திருக்கோயில்களில் முக்கியமானது. இந்த கோயிலில், முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில், மூலவர்களான ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரா தேவி திருமேனிகள் மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெகன்னாதர் கோயிலில் ஆண்டு தோறும் ரதயாத்திரை விழா நடைபெறும். இந்த விழாவின் போது ஜெகன்னாதர், பாலபத்ரா, சுப்த்ரா தேவி ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட 3 பிரமாண்ட ரதங்களில் வலம் வருவர்.

இந்தாண்டுக்கான விழா பிரமாண்டமாக இன்று தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள், ரதங்களை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று முதல் 15 நாட்கள் ரத யாத்திரை நடைபெறுவதால் பக்தர்களின் பாதுகாப்பு பணிகளுக்காக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு கூடியுள்ள பக்தர்கள், ரதயாத்திரையை வரவேற்று, பக்திப் பாடல்களுடன் ஆடி மகிழ்ந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவர் மனைவி சோனல் ஷா ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தும் யாத்திரைகள் புறப்பட்ட உள்ளன.