இந்தியா

“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி

webteam

குழந்தைகளை அரசின் ஆங்கில பள்ளிக் கூடத்தில் படிக்க வையுங்கள் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் ஏழை எளிய பிள்ளைகளும் ஆங்கிலம் கற்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு எதிராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குரல் எழுப்பி இருந்தார். ‘ஏழைப் பிள்ளைகள் படிக்க தெலுங்கு மொழியான தாய் மொழி மட்டும் போதாதா? ஏன் அவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும்?’ என அவர் கேட்டிருந்தார். இதே கேள்வியை பவன் கல்யாண் மற்றும் வெங்கய்யா நாயுடுவும் கூட எழுப்பி இருந்தனர். குழந்தைகள் தாய் மொழியில் படிப்பதே சரி என இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார். அவர், “இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. ஆகவே ஆங்கிலம் இல்லாமல் ஒருவர் உலகத்துடன் போட்டிபோட முடியாது. அதனால்தான் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும், எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்விப்  போதிக்க வேண்டும் என்று முயல்கிறேன்.

இந்த முடிவுக்கு எதிராக சில கேள்வி எழுப்புகின்றனர். ஏழைகளுக்கு ஏன் ஆங்கில வழிக் கல்வி, அவர்களுக்கு தெலுங்கு வழிக் கல்வி போதாதா? என அவர்கள் கேட்கின்றனர். சந்திரபாபு நாயுடு, வெங்கையா நாயுடு மற்றும் பவன் கல்யாண் போன்றோர் இந்த கேள்விகளை எழுப்புகின்றனர்.” என்று கூறியுள்ளார்.