இந்தியா

கழிப்பறை இல்லையா ? சம்பளம் கட்

கழிப்பறை இல்லையா ? சம்பளம் கட்

webteam

ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் 616 அரசு ஊழியர்களின் சம்பளத்தை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏன் திடீரென இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? பணிக்கு சரியாக வரவில்லையா ? சரியாக பணியாற்றவில்லையா ? என காரணம் கேட்ட போது அதிகாரிகள் கூறியவை வியப்பாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக மாற்ற அம்மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மாநில அரசின் முயற்சியால் திறந்தவெளி கழிப்பிடங்கள் குறைக்கப்பட்டு, 71 % என்ற நிலையில் வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கிஸ்த்வார் மாவட்ட அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அரசு ஊழியர்களாக பணியாற்றும் பலர், தங்களது வீடுகளில் கழிவறை கட்டாதது தெரியவந்தது. இதனையடுத்து கிஸ்த்வார் மாவட்ட வளர்ச்சித்துறை அதிகாரி அங்க்ரேஷ் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதில் அரசு வேலையில் இருந்து கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தாத 616 அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்தது அரசு