இந்தியா

பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்கள்.. இரவில் 5 மணி நேரம் நடந்துசென்று காப்பாற்றிய ராணுவம்!

Veeramani

ஜம்மு காஷ்மீரில் பலத்த பனிப்பொழிவு ஏற்பட்டதில் பொதுமக்கள் 10பேர் என்.எச் -244 இல் சிக்கினார்கள். இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு இரவில் 5 மணி நேரம் நடந்து சென்று அவர்களை மீட்டது.

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கடுமையாக பனி பொழிந்து வருகிறது. என்.எச் -244 இல் சிங்கம் நோக்கிச் செல்லும் சிந்தான் பாஸ் அருகே ஒரு இடத்தில் பொதுமக்கள் 10பேர் சிக்கியிருந்தனர். இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட  பனிப்பொழிவில் சிக்கியிருந்த இவர்களின் இடத்தை அடைவதற்கு மீட்புக் குழு இரவில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது, கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட பொதுமக்கள் சிந்தான் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை மிகவும் குறைந்தது. குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற மலைவாசஸ்தலங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் அதிக பனிப்பொழிவைப் பெற்றன. வானிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிச்சரிவு எச்சரிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.