இந்தியா

ஜம்மு எல்லையில் 14 அடி நீள சுரங்கம்

ஜம்மு எல்லையில் 14 அடி நீள சுரங்கம்

webteam

ஜம்மு காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே, பாகிஸ்தானிலிருந்து தோண்டப்பட்டு வந்த 14 அடி நீள சுரங்கத்தை எல்லைப் பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் அர்னியா பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் ஊடுருவும் வகையில் பாகிஸ்தானிலிருந்து தோண்டப்பட்ட 14 அடி நீள சுரங்கம் கண்டறியப்பட்டது. மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நிகழ்த்த திட்டமிடுவதற்கு ஏதுவாக இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களில் எல்லைப் பாதுகாப்புப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சுரங்கம் இதுவாகும். இந்த சுரங்கத்திலிருந்து துப்பாக்கி கேட்ரிஜ்கள், கத்தி, பேட்டரிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.