இந்தியா

'பஞ்சாபில் நடப்பது காட்டாட்சி' - நவ்ஜோத் சிங் சித்து கடும் விமர்சனம்

JustinDurai

பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியினரால் கொடூரமாக தாக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும்  நவ்ஜோத் சிங் சித்து புகார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து  நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், ''பஞ்சாபில் இதுபோன்ற அராஜகத்தை நான் பார்த்ததில்லை. சட்டம் ஒழுங்குக்கு யாரும் பயப்படுவதில்லை. இங்கே காட்டாட்சிதான் நடக்கிறது. பட்டப்பகலில் சர்வசாதாரணமாக அரசியல் கொலைகள் நடக்கின்றன. பக்வாராவில் மற்றொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார், குர்தாஸ்பூரில் 5 பேர் கொல்லப்பட்டனர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதியைத் தவிர வேறு எந்த முன்னுரிமையும் இருக்கக்கூடாது. நீதி கிடைக்கும் வரை போராடுவோம்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: உத்தரப்பிரதேசத்தில் களேபரம் - கோரக்பூர் கோயிலில் என்ன நடந்தது?