இந்தியா

கல்கி ஆசிரமத்தில் 4ஆவது நாளாக நீடிக்கும் சோதனை 

webteam

கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் 4ஆவது நாளாக சோதனை நீடித்து வருகிறது.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான சொத்துகள் உள்ளன. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் கடந்த 16ஆம் தேதி, அந்த இடங்களில் வருமானவரித்துறை சோதனையை தொடங்கியது. தொடர் விசாரணையில், கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் 500 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

நேற்றைய சோதனை சுமார் 93 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 26 கோடி ரூபாய் மதிப்புடைய 88 கிலோ தங்கமும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.