ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக கவுன்ட்டவுன் தொடங்கியது.
வானிலை மாற்றத்தை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிசாட் 29 செயற்கைகோள், மார்க்-3 டி2 ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை மாலை ஐந்து மணி 8 நிமிடத்தின்போது விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி 38 நிமிட கவுன்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
கடல்சார் ஆராய்ச்சி, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. மூவாயிரத்து 423 கிலோ எடை கொண்ட ஜிசாட் 29 செயற்கைகோளில் அதிநவீன சக்தி கொண்ட டரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஜிசாட் 29 செயற்கைகோளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.