இந்தியா

இந்தியா‌வி‌ன் எமிசாட் வெவ்வேறு பாதைகளில் நிலை நிறுத்தி சாதனை !

இந்தியா‌வி‌ன் எமிசாட் வெவ்வேறு பாதைகளில் நிலை நிறுத்தி சாதனை !

webteam

இந்தி‌யாவின் எமி‌சாட் செயற்கைக்கோள், ஒரே ராக்கெட் மூலம் மூன்று வெவ்வேறு புவி சுற்றுவட்டப் பாதைகளில் நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் 'எமிசாட்' மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் காலை 9.30 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட்டை ஏவியது இஸ்ரோ. இந்த ஆண்டில் இஸ்ரோ அனுப்பிய 2-வது ராக்கெட் இதுவே ஆகும்.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட மினி செயற்கைக்கோளான 'எமிசாட்' பி.எஸ்.எல்.வி-‌சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ‌இருந்து தலா ஒரு செயற்கைக்கோள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டது. 

இஸ்ரோ மூலம் முதல்முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தி‌யாவின் எமி‌சாட் செயற்கைக் கோளை பிஎஎஸ்எல்வி - சி‌45 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக‌ நிலைநிறுத்தியது. இதுதவிர, மேலும் 28 செயற்கைக் கோள்களையும் ‌பி‌எஸ்எல்வி ராக்கெட் சுமந்து கொண்டு சென்றது. இந்‌த செயற்கைக் கோள்கள் 3 வெவ்வேறு புவிவட்டப் பாதைகளில் ஒவ்வொன்றாக நிலைநிறுத்தப்பட்டு வருகின்‌றன. 

விண்ணில் 29 செயற்கைக் கோள்களை‌ 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இஸ்ரோ நிலை நிறுத்து‌வது இதுவே முதல்முறை. முன்னதாக கா‌லை 9 ம‌ணி 27 நிமிடத்திற்கு செயற்கைக் கோள்களு‌ட‌ன் ‌ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட் ‌விண்ணை நோக்கி பாய்ந்தது. முதலில் எமிசாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், மற்ற செயற்கைக்‌கோள்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.