இந்தியா

இஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம்: பிரதமர் மோடி புகழாரம்

இஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம்: பிரதமர் மோடி புகழாரம்

webteam

சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியன் மூலம் இஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது 100ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட் 2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. காலை 9.29 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம், கார்டோசாட் 2 உட்பட இந்தியாவின் 3 செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த 28 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. இந்த 28 செயற்கைக்கோள்களையும் வணிகரீதியில் தனது ராக்கெட்டில் இஸ்ரோ செலுத்தியுள்ளது.

சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியன் மூலம் இஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என மோடி கூறினார்.