இந்தியா

வீடு புகுந்து இஸ்ரோ விஞ்ஞானியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீடு புகுந்து இஸ்ரோ விஞ்ஞானியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

webteam

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தேசிய ரிமோட் சென்சிங் சென்டர் (என்.ஆர்.எஸ்.சி) விஞ்ஞானி ஹைதராபாத்தில் உள்ள அவரது குடியிருப்பில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் ஹைதராபாத் அமீர்பேட்டை அண்ணப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி இந்திரா சென்னையில் தங்கி வங்கியில் வேலைப்பார்த்து வருகிறார். 

இதையடுத்து சுரேஷ் பணிக்கு வராததால் உடன் வேலை செய்பவர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷ் வசிக்கும் அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அவரது உறவினர்கள் அவரின் வீட்டை ஆய்வு செய்தனர். 

அப்போது சுரேஷ் கொலைசெய்யப்பட்டிருப்பதை கண்டறிந்த அவர்கள் ஹைதராபாத்திற்கு விரைந்து வந்த அவரது மனைவியிடமும் தகவல் கொடுத்து, காவல்துறையினருக்கும் அறிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து சுரேஷ் கொலைசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். 

ஒரு பலமான ஆயுதத்தால் சுரேஷ் தாக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுரேஷ் கடந்த 20 வருடங்களாக அந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி ஹைதராபாத்தில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டுதான் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர்களது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகள் டெல்லியில் உள்ளார்.