sunita williams web
இந்தியா

”இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் உங்கள் நிபுணத்துவத்தை பயன்படுத்துவோம்..” சுனிதாவுக்கு ISRO வாழ்த்து!

விண்வெளி நிலையத்தில் இருந்துவிட்டு 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக திரும்பி வந்திருக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கு இஸ்ரோ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Rishan Vengai

9 மாத இடைவெளிக்குப்பின் விண்வெளியிலிருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பியிருக்கும் வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு இஸ்ரோ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

சவாலான சூழலுக்கு பிறகு பத்திரமாக திரும்பிவருவாரா என்ற கேள்வி பெரிதாக இருந்த நிலையில், இன்று பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிவந்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

விண்கலம் தரையிரங்குவதற்கு முன்னதாக சுனிதா விண்வெளியிலிருந்து பாதுகாப்பாக வருவதற்காக கோயில்களில் வேள்விகள், தீபம் ஏற்றுதல் போன்ற வழிபாடுகளும் நடைபெற்றன.

சுனிதாவுக்கு பாராட்டு தெரிவித்த இஸ்ரோ!

விண்வெளியில் சவாலான சூழலில் நீண்ட காலம் ஆய்வு செய்து சாதனை படைத்திருக்கிறார் சுனிதா என இஸ்ரோவின் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளது.

சுனிதாவின் செயல்கள் உலகெங்கும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் ஊக்கம் தரும் செய்தி என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. சுனிதா வில்லியம்சின் நிபுணத்துவத்தை தாங்களும் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே சுனிதா வில்லியம்சின் பூர்விக ஊரான குஜராத்தின் மெஹ்சானாவில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியவுடன் பட்டாசுகள் வெடித்தும் ஆடல் பாடலுடனும் ஹரஹர மகாதேவா என்ற முழக்கத்துடனும் மக்கள் கொண்டாடினர்.