இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்  புதிய தலைமுறை
இந்தியா

”நிலவொளியை குடித்த சிங்கங்கள்”- சுயசரிதை புத்தகம் வெளியிடும் முடிவை கைவிட்ட சோம்நாத்! இதான் காரணமா?

PT WEB

தனது சுய சரிதையை வெளியிடும் திட்டத்தை கைவிடுவதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

நிலவு குடிச்ச சிம்மங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோமநாத் நிலவு குடிச்ச சிம்மங்கள் அதாவது நிலவொளியை குடித்த சிங்கங்கள் என்ற பெயரில் மலையாள மொழியில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார். இந்நிலையில்
அப்புத்தகத்தை வெளியிடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிவன் தனது பதவி உயர்விற்கு தடையாக இருந்தார் என்ற ரீதியில் சோமநாத் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தன் சுய சரிதை புத்தகத்தை தற்போதைக்கு
வெளியிடப்போவதில்லை என சோமநாத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தகவலில், “முக்கிய பதவிகளை அடைவதற்கு பல்வேறு சவால்களை கடந்தாக வேண்டியுள்ளது என்று  பொதுவாகத்தான் குறிப்பிட்டடேன். யாரையும் குறிப்பாக கூறவில்லை. எனவே புத்தகம் அடுத்த வாரம் வெளியாக இருந்தநிலையில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக வெளியீட்டை நிறுத்தி வைக்குமாறு பதிப்பாளரை கேட்டுக்கொண்டுள்ளேன். “ என்று சோமநாத் தெரிவித்துள்ளார்.