கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல காட்டுவிளை கிராமத்தில் இஸ்ரோவின் புதிய தலைவர்
நாராயணனின் உறவினர்களும் ஊர் மக்களும் மகிழ்ச்சியில்
திளைக்கின்றனர்.
ஏழ்மையான சூழலில் வளர்ந்த அவர், கடின உழைப்பால் முன்னேறி இந்தியாவின் மிக உயரிய பொறுப்பிற்கு வந்தது அந்த மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். பழக எளியவர், சாதி மத வேறுபாடின்றி சகோதரத்துவம் பேணும் பண்பாளர் என அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.