இந்தியா

ரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்

webteam

‘சந்திரயான் 2’ போலவே ‘சந்திரயான் 3’ இருக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்து கற்பிக்கப்படும். லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதிவிட்டது. எனவே நிலவில் லேண்டரை, வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை.

‘சந்திரயான் 3’ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் லேண்டர், ரோவருடன் கூடுதலாக தரையிறங்கும் மாடுல் இடம்பெறும். சந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும். சந்திரயான் 2 போலவே சந்திரயான் 3 இருக்கும். 600 கோடியில் சந்திரயான் 3 செயல்படுத்தப்படும். இதுதவிர ஆதித்யா திட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்படும்.” எனத் தெரிவித்தார்.