இந்தியா

ஜம்மு காஷ்மீர் : “திருமண நிகழ்வில் இசை கூடாது” ஃபத்வா பிறப்பித்த இஸ்லாமிய மதகுருமார்கள்

EllusamyKarthik

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் திருமண நிகழ்வில் DJ அல்லது டிரம்ஸ் இசைத்தால் அல்லது இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் நிக்காஹ் செய்து வைக்க முடியாது என இஸ்லாமிய மதகுருமார்கள் ஃபத்வா உத்தரவு பிறப்பித்துள்ளனர். அவர்கள்து இந்த நடவடிக்கை விவாத பொருளாக மாறியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த மாவட்டத்தில் உள்ள Mankote கிராமத்தில் இது நடந்துள்ளது. இந்த நிலையில் இஸ்லாமிய மதகுருமார்களின் இந்த செயல் பல்வேறு தரப்பினர் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 

“ஜம்மு காஷ்மீர் குழந்தைகள், துப்பாக்கிகளை விட்டுவிட்டு மடிக்கணினிகளை எடுத்து கல்வி கற்கவும், நன்றாக சம்பாதிக்கவும் ஏன் ஃபத்வா உத்தரவு வழங்கப்படவில்லை. DJ மாதிரியான வேலைகளை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் சாமானியர்களால் அவர்களுக்கு என்ன பிரச்சனை?” என கேள்வி எழுப்பி உள்ளார் பாஜகவை சேர்ந்த யுத்வீர் செத்தி.