இஷா அம்பானி ANI
இந்தியா

இப்படி பிறந்ததுதான் ஜியோவா?இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் இஷா அம்பானி சொன்ன கதை!!

ஜியோ பிறந்தது இப்படித்தான் என இஷா அம்பானி அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜியோவுக்கு பின்னால் இருக்கும் அந்த குட்டி ஸ்டோரி என்ன?.. இந்த வீடியோவில் பார்க்கலாம்..

PT WEB

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ன் கீழ் வரக்கூடிய ஜியோவை 52 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் தவிர்க்க முடியாத இன்ஃபோகாம் சேவைகளில் முதன்மையானதாக இருக்கக் கூடிய இந்த ஜியோ நிறுவனத்தின் நடப்பு ஆண்டு நிகர லாபம் மட்டுமே 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த துறையில் கால் பதிக்க வேண்டுமென்ற எண்ணம் தங்கள் குழுமத்துக்கு எப்படி பிறந்தது என்ற கதையை இஷா அம்பானி பகிர்ந்திருக்கிறார்.

கோப்புப்படம்

நானும் எனது சகோதரர் ஆகாஷும் அமெரிக்காவில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தோம். அது 2009-10 காலகட்டமாக இருக்கும். இருவரும் விடுமுறைக்காக மும்பையில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தோம். அப்போது எங்களுக்கு கல்லூரியில் இருந்து அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதை இங்கிருந்து இணையம் வாயிலாக சமர்ப்பிக்க முயன்றோம். ஆனால், இணையம் வேலை செய்யாததால் எங்களால் அதை சமர்பிக்க முடியவில்லை. அப்போதுதான் டிஜிட்டல் தளத்தில் இந்தியா ஏன் இவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்ற விவாதம் எங்களுக்குள் ஏற்பட்டது. வெளிநாடுகளில் அனுபவிக்கக் கூடிய அதே மாதிரியான இணைய வசதி ஏன் இங்கு நமக்கு இல்லை? என எனது சகோதரர் ஆகாஷ் கூட கேட்டார்.

எனவே அதற்கான ஒரு நிறுவனத்தை உருவாக்குவதே இதற்கான சரியான தீர்வாக இருக்குமென அப்போது ஆகாஷ் நம்பினார். அதற்கு கிடைத்த பதில் தான் இந்த ஜியோ நிறுவனம். 2016-ல் தொடங்கப்பட்ட ஜியோ தற்போது 2026-ல் வந்து நிற்கிறது. மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் நானும், ஆகாஷும் ‘வளர்ச்சியே வாழ்க்கை’ என்ற தாரக மந்திரத்தில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார். சிறிய கூட்டரங்கு ஒன்றில் பேசிய இஷா அம்பானியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.