இந்தியா

அம்பேத்கர் பேரனை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமா எதிர்க்கட்சிகள்?

அம்பேத்கர் பேரனை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமா எதிர்க்கட்சிகள்?

webteam

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பாக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நிறுத்தப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில்,‌ சட்ட மேதை அம்பேத்கரின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் அம்பேத்கர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பெயரை இடதுசாரிக் கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் இல்லாத பிற கட்சிகள் ஏற்றுக் கொண்டால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பிரகாஷ் அம்பேத்கர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் பாஜக சார்பாக தலித் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரகாஷ் அம்பேத்கரின் தேர்வு பாஜகவுக்கு நெருக்கடி அளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரிஸ்ட்கள் பிரகாஷ் அம்பேத்கர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.