ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை குடியரசுத்துணை தலைவராக்க வேண்டும் என பிஹார் பாஜக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக எம். எல்.ஏ ஹரி பூஷண், நிதிஷ்குமாரை குடியரசுத் துணைத் தலைவர் ஆக்குவதை விட சிறந்தது என்ன இருக்க முடியும் என தெரிவித்தார். அதேபோல் பாஜக அமைச்சர் நீரஜ் குமார் சிங்கும், நிதிஷ்குமாருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதவி வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமார் குடியரசுத்துணை தலைவர் ஆவதில் எந்த தவறும் இல்லை என அவர் கூறினார். நிதிஷ் குமாரை குடியரசு துணைத் தலைவர் ஆக்கிவிட்டால், பிஹார் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்றலாம் என்ற நோக்கத்திலேயே பாஜகவினர் இப்படி கூறி வருவதாக பேச்சு எழுந்துள்ளது.
பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலுக்கு பிறகு, மகாராஷ்டிராவில் முன்னாள்
முதல்வர் ஏக்நாட் ஷிண்டேவுக்கு ஏற்பட்ட கதி நிதிஷ்குமாருக்கு ஏற்படும் என்றும், நிதிஷ்குமாரை குடியரசு
துணைத்தலைவராக்க பாஜக முயலும் என்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கணித்துள்ளார்.