இந்தியா

கிட்கேட் சாக்லேட்டா, பிஸ்கட்டா? பாராளுமன்றத்தில் விவாதம்

Rasus

ஜிஎஸ்டி மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி அந்த மசோதாவின் கீழ், கிட்கேட் சாக்லேட்டா அல்லது பிஸ்கட்டா என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் நடைப்பெற்ற ஜிஎஸ்டி விவாதத்தின்போது காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி பேசினார். நாடு முழுவதும் ஒரே வரி என்பதை நடைமுறைப் படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொருட்கள் வகைப்படுத்துதல் செய்வது மிகவும் கடினம் எனவும் அது சரியாகச் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். தனது கருத்தை விளக்கிய வீரப்ப மொய்லி ‘கிட்கேட் சாக்லேட்டாக கருதப்படுமா அல்லது பிஸ்கடாக கருதப்படுமா?’ என்று கேட்டார். இதே போல தேங்காய் எண்ணெய், சமைப்பதற்கான எண்ணெயாகக் கருதப்படுமா அல்லது தலைக்குத் தடவும் எண்ணெயாகக் கருதப்படுமா? எனவும் கேட்டார்.