பிரதமர் மோடி, ஜி20 மாநாடு
பிரதமர் மோடி, ஜி20 மாநாடு pt web
இந்தியா

தொடங்கியது ஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு முன்பாக ’பாரத்’ எனப் பெயர்ப்பலகை!

PT WEB

ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக இருந்த பெயர் பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று இடம் பெற்றிருந்தது.

ஜி 20 உச்சி மாநாடு இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இதில் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் நாடுகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பெயர் பலகைகள் வைக்க பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியின் முன்பாக பாரத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டது.

ஜி 20 உச்சி மாநாடு

முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜி 20 மாநாட்டு விருந்தினர்களுக்கு அளிக்கும் சிறப்பு விருந்திற்கான அழைப்பிதழில் பாரத்தின் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது அதேபோல இந்தோனேசியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்ட போதும் அதற்கான குறிப்பில் பாரத்தின் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டது.

கலாசாரம், பாரம்பரியம் உணர்த்தும் ஏற்பாடுகள்

சாமந்தி, செவ்வந்தி, என பல வண்ணப்பூக்கள் டெல்லியின் முக்கிய சாலைகளில் உள்ள மரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஜி 20 இலச்சினையும் மலர்களால் உருவாக்கப்பட்டு, முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மைதானத்தில் இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்கங்களும் திறக்கப் பட்டுள்ளன.

குடியரசுத்தலைவர் விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தின் பல வகை கைத்தறித் துணி வகைகள், தொன்மையான பொருட்கள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மர வேலைப்பாட்டுப்பொருட்கள், நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் பொம்மை மற்றும் மயிலாடி கல் பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளன. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு விருந்து அளிக்கிறார். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

டெல்லி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் மட்டுமின்றி எல்லையில் உள்ள நொய்டாவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற செக்டார் 18 சந்தை, வணிக வளாகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் நொய்டாவில் உள்ள உயர்ந்த கட்டடங்களின் உச்சிக்கும் சென்று யாரேனும் பதுங்கியிருக்கின்றனரா என சோதனை செய்தனர். றனர்.

இந்நிலையில் இந்தியா தலைமை ஏற்று நடத்தும் ஜி 20
மாநாட்டில் பங்கேற்க, நேற்றிரவு 7 மணியளவில் தலைநகர் டெல்லி வந்த ஜோ பைடனுக்கு, விமான நிலையத்தில்
உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

ஜோ பைடன் - பிரதமர் மோடி

மோடியின் வீட்டில் பைடனை வரவேற்ற பிரதமர், அவருக்கு விருந்தளித்து உபசரித்தார். முன்னதாக, இரு நாட்டு
தலைவர்களும் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராணுவம், தொழில்நுட்ப பகிர்வு
குறித்தும் அவர்கள் பேசினர்.