ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் 450 ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முடித்து வைக்கப்படும் என்றும் இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவத்துள்ளது. கடந்த 2015-ல் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள 345 ரயில் நிலையங்களில் 1,106 குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.