இந்தியா

ரயில் டிக்கெட் முன்பதிவு: ஐஆர்சிடிசி விளக்கம்

webteam

ரயில் டிக்கெட் முன்பதிவை எல்லா வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் தடையின்றி மேற்கொள்ளலாம் என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது. 

ஐஆர்டிசி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படும்போது அனைத்து வகை கிரெடிட், டெபிட் வங்கி கார்டுகளும் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இனி குறிப்பிட்ட 7 வங்கி கார்டுகள் மூலம் மட்டுமே, ரயில் டிக்கெட் முன்பதிவுகள் செய்யப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்ததாக, நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ளது ஐஆர்சிடிசி. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ’விசா மற்றும் மாஸ்டர் கார்டு கொண்ட எந்த வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று தெரிவித்துள்ளது.