இந்தியா

ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடை

ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடை

rajakannan

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் ப.சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிபிஐ காவலில் உள்ளார். இதனிடையே, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் 26ஆம் தேதி (நேற்று) வரை சிதம்பரத்தை கைது செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமலாக்கத்துறையினர் கைது செய்வதற்கான தடை முடிவடைந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய நாளை வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, வழக்கில் நாளை மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் வரை விசாரணை நடைபெறும்.