இந்தியா

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி 

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி 

rajakannan

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் உள்ளார். இதனிடையே, ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி சுரேஷ் குமார் காய்ட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய ஒருவரை தனக்கு எதிராக பேச வேண்டாம் என சிதம்பரம் கூறியதாக சி.பி.ஐ. சீலிடப்பட்ட கவரில் சமர்பித்த ஆதாரம் அடிப்படையில் ஜாமின் மறுப்புக்கப்பட்டுள்ளது.