இந்தியா

விசாரணையில் சசிகலா சொன்னது என்ன?

webteam

பெங்களூரு சிறையில், தனக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்று விசாரணை குழுவிடம் சசிகலா கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். இதுபற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட  குழு, விசாரணை நடத்தி வருகிறது. 
விசாரணையில், சசிகலா ‘மற்ற கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட அறையை போலத்தான் எனக்கும் கொடுத்துள்ளனர். பெண் கைதிகளுக்கான சீருடையை அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. எனக்கு தேவையான சில பொருட்களை  அதிகாரிகளின் அனுமதியுடன் பெற்றேன். எனக்கு எந்த சிறப்பு வசதிகளும் சிறை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.