புர்ஹான் வானியின் நினைவு தினத்தையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் துண்டிக்கப்பட்டிருந்த இணைய சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதி புர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்றும், நேற்று முன்தினமும் இணையதளம், செல்போன், அகன்ற அலைவரிசை போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் செல்போன் இணையதள சேவை மட்டும் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிவேக இணையதள மற்றும் அகன்ற அலை வரிசை தொடர்ந்து முடக்கியே வைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரி்ல் இன்றைய சூழ்நிலைமையை நன்கு ஆராயந்த பின்னரே ஏனைய சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புர்ஹான் வானி கடந்த ஜூலை 8 ஆம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.