இந்தியா

சமூகவலைதளத்தில் அவதூறு: இன்போசிஸ் ஊழியர் கைது !

சமூகவலைதளத்தில் அவதூறு: இன்போசிஸ் ஊழியர் கைது !

jagadeesh

பொது இடத்தில் தும்மி அனைவரும் வைரஸை பரப்புங்கள் என சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட இன்போசிஸ் ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

முஜீப் முகமது என்பவரின் பதிவிற்கு பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். அவர் தனது முகநூல் பக்கத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்ட பணியாளரை , நீக்கம் செய்ததாக அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அவதூறு பரப்பிய முஜீப் முகமதுவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 870க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.