இந்தியா

கால்டாக்ஸிகளை ஒழுங்குப்‌படுத்துவதற்கு தனிச்சட்டம்

webteam

ஓலா மற்றும் ‌உபேர் போன்ற கால்டாக்ஸிகளை ஒழுங்குப்‌படுத்துவதற்கு ‌மத்திய அரசு தனிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

அண்மைகாலமாக உபேர், ஓலா, டேக்ஸி ஃபார் ஷ்யூர் உள்ளிட்ட கால் டாக்ஸி நிறுவனங்களின் செல்ஃபோன் அப்ளிகேஷன் அடிப்படையிலான சேவைகள் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. ஆனால் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதாக அவ்வபோது குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், இதுபோன்ற மொபைல் செயலி அடிப்படையிலா‌ன டாக்ஸி சேவைகளில் பெண்களின் ‌பாதுகாப்பை உறுதி செய்‌வதற்கு தனி சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய‌ அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.