இந்திராகாந்தி மிக அழகான பாடகி என்று பாலிவுட் பாடகி லதாமகேஷ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 33 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி இந்தியாவின் மெலோடி குயின் லதா மகேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்திஜியின் நினைவு நாளாகும், நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்," என ட்வீட் செய்துள்ளார்.
மேலும் “இந்திரா காந்தியுடன் நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். அவருக்கு இசையில் ஆர்வம் இருந்தது. அத்துடன் அவர் மிக அழகாக பாடவும் செய்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.