இந்தியா

37 பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பறந்த இண்டிகோ விமானம்

37 பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பறந்த இண்டிகோ விமானம்

JustinDurai

37 பயணிகளின் லக்கேஜ்களை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பறந்துள்ளது இண்டிகோ விமானம்.  

ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம், விமானத்தில் சென்ற பயணிகளின் 37 பைகளை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதாக இண்டிகோ நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6E 409 விமானத்தில் பயணிகளின் 37 பைகள் கவனக்குறைவாக விட்டுச் சென்றதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.