இந்தியா

பறவை மோதியது: அவசரமாக தரையிறங்கியது இண்டிகோ

பறவை மோதியது: அவசரமாக தரையிறங்கியது இண்டிகோ

webteam

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பறவை மோதியதால் விமானம் அவசர அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. 

கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று விமானத்தில் மோதியது. 
இதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் விமானம் மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் விமான பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.