இந்தியா

இண்டிகோ உணவகத்தில் அசைவம் மறுக்கப்பட்டதாகப் புகார்

இண்டிகோ உணவகத்தில் அசைவம் மறுக்கப்பட்டதாகப் புகார்

webteam

டெல்லியிலிருந்து சென்னை வந்த விமானப் பயணிக்கு இண்டிகோ நிறுவன உணவகத்தில் அசைவ உணவு மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

டெல்லியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணி‌கள் அனைவரும் இண்டிகோ-வுக்கு சொந்தமான உணவகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அசைவ உணவு இருந்தபோதிலும், விமானப் பயணிகளுக்கு சைவ உணவே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த ப‌யணி ஒருவர், உணவை தேர்வு செய்யும் அடிப்படை உரிமையை இண்டிகோ நிறுவனம் மறுத்துள்ளதாகவும், எந்த உணவை சாப்பிட வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது யார் ? என்றும் கூறி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள இண்டிகோ நிறுவனம், அடுத்த முறை இதுபோல் நடக்காது என தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதனை ஏற்க மறுத்துள்ள விமானப் பயணி, இண்டிகோ நிறுவனத்தின் கட்டளையால் தான் அசைவ உணவு மறுக்கப்பட்டதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.