இண்டிகோ விமானம் pt
இந்தியா

95% விமானச் சேவை சரிசெய்யப்பட்டது.. ரீபெண்ட் வழங்கப்பட்டு வருகிறது! - இண்டிகோ அறிவிப்பு!

கடந்த ஆறு நாட்களாக இண்டிகோ நிறுவனத்தின் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 95 சதவீதம் சேவைகள் சரிசெய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது..

PT WEB

சில தினங்களாக தடைப் பட்டிருந்த தங்களது விமான சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இண்டிகோ விமானம்

மத்திய அரசு கொண்டுவந்த புதிய விதிமுறையால், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் 6 தினங்களாக இண்டிகோ விமான சேவை கடுமையான பாதிப்பை சந்தித்தது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா,சென்னை, பெங்களூரு என மெட்ரோ நகரங்களில் விமானச் சேவைகள் முடங்கியதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இண்டிகோ விமானங்கள்

இந்நிலையில், தடைப் பட்டிருந்த தங்களது விமானசேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 95 விழுக்காடு விமானசேவை இணைப்பு மீட்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கான ரீபெண்ட் வழங்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.