நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழு புள்ளி இரண்டு சதவிகிதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் ஏழு புள்ளி ஏழு சதவிகிதமாக இது அதிகரிக்கும் என்றும் சர்வதேச நிதியம் கூறியுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்லத் தொடங்கியுள்ளதாகவும் சர்வதேச நிதியம் கூறியிருக்கிறது.