copper x page
இந்தியா

Goldஐ முந்தும் Copper? அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுதான் நடக்கும்.. வெளியான முக்கிய கணிப்பு!

இந்தியாவில் தாமிரத்திற்கான (copper) தேவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 10-12 சதவீதம் இருக்கும் என்று Investment Information and Credit Rating Agency கணித்துள்ளது.

திவ்யா தங்கராஜ்

இந்தியாவில் தாமிரத்திற்கான (copper) தேவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 10-12 சதவீதம் இருக்கும் என்று Investment Information and Credit Rating Agency கணித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்விற்கு மாதிரியில் காப்பரின் தேவை உயர்வதற்கான காரணம் என்ன, எதற்கெல்லாம் அது பயன்படும் என பார்க்கலாம். 

காப்பர்

இந்தியாவின் உள்நாட்டு காப்பர் நுகர்வு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 10-12 சதவீதம் வரை வளரும் என்று முன்னணி தர மதிப்பீட்டு நிறுவனமான ICRA தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. நகரமயமாக்கல், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் பசுமை ஆற்றல் மாற்றங்கள் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் காணப்பட்ட 14-15% என்ற அதீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 10-12% ஆக சற்று நிதானமாக இருக்கும். 

காப்பர் விலை உயர்வு, குறுகிய கால தேவையைச் சற்று கட்டுப்படுத்தலாம் என்பதே இதற்குக் காரணம். சர்வதேச சந்தையில் காப்பர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 2026 ஜனவரியில் ஒரு டன் காப்பர் சுமார் 13,000 டாலர் வரை எட்டியுள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இதன் விலை சுமார் 40% அதிகரித்துள்ளது. சுரங்க உற்பத்தி பாதிப்பு மற்றும் தாதுப் பொருட்களின் தரம் குறைவது போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் டேட்டா சென்டர்கள், மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் காரணமாகத் காப்பருக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று ICRA கணித்துள்ளது. இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட காப்பரின் பற்றாக்குறை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உற்பத்தி ஆலைகளின் திறன் விரிவாக்கம் இதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.